1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (15:28 IST)

வீட்டு உரிமையாளர் வெளியேற்றியதால் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தஞ்சம் அடைந்த மூதாட்டி

கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தஞ்சம் அடைந்த மூதாட்டி
வாடகை வீட்டில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் வீட்டின் உரிமையாளர் விரட்டியதால் வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகத்தில் வந்து தஞ்சம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரையை அடுத்த காடுபட்டி என்ற பகுதியை சேர்ந்த 70 வயதான சோலை வீரம்மாள் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். விதவை உதவித் தொகையின் மூலம் அவர் வாடகை மற்றும் செலவுகளை சமாளித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு கடந்த ஒரு வருடமாக விதவை உதவித்தொகை வரவில்லை என தெரிகிறது
 
இதனால் அவரால் வாடகை கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் வலியுறுத்தியதை அடுத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். எனவே தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் நேராக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்
 
இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்கிராஸ் அமைப்பினர் மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவி செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டரிடம் அந்த மூதாட்டிக்கு விதவை உதவித்தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது