செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (08:48 IST)

வங்கியில் நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்! பரிதாபமாக பலியான பெண்!

கேரளாவில் வங்கிக்கு பணம் எடுக்க சென்ற 46 வயது பெண் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் சேரநல்லூரைச் சேர்ந்தவர் பீனா என்ற மத்திய வயது பெண். இவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு நேற்று மதியம் பணம் எடுக்க சென்றுள்ளார். தன் வேலைகளை முடித்துவிட்டு வெளியே சென்ற அவர், தனது இரு சக்கர வாகனத்தின் சாவியை வங்கியின் உள்ளேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை அறிந்து மீண்டும் வங்கிக்கு சென்று சாவியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வங்கியின் வாசலில் இருந்த கண்ணாடிக் கதவைத் திறக்காமல் அதில் மோதிக் கொண்டுள்ளார். அப்போது கதவில் இருந்த கண்ணாடி உடைந்து அவர் வயிற்றில் குத்தியுள்ளது. இதில் அதிகமாக ரத்தம் வெளியாகி அவர் மரணமடைந்துள்ளார். அவரை வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது பீனாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.