1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (19:57 IST)

செங்கோட்டை தாக்குதல் குற்றவாளியின் கருணை மனு நிராகரிப்பு.. தூக்கு உறுதி..!

செங்கோட்டை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஆரிப் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.
 
கடந்த 2000ம் ஆண்டு செங்கோட்டை தாக்குதல் வழக்கில் உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஆரிப் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்த நிலையில் அவர் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஜனாதிபதி இன்று நிராகரித்தார்.
 
கடந்த 2000 ஆண்டு மாதம் 22ஆம் தேதி டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவினர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
 
இந்த தாக்குதல் தொடர்பாக 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் அவருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva