1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (09:00 IST)

பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் தூக்கு தண்டனை! – முதல்வர் அறிவிப்பு!

பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களை தூக்கில் போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.



மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

சமீபத்தில் நவராத்திரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ”எனது மகள்கள் மற்றும் சகோதரிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது. அவர்களது வீடுகள் புல்டோசர்களை கொண்டு இடிக்கப்படும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க நடவடிக்கை எடுப்பேன்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K