உலகக் கோப்பை டிக்கெட்டை பிளாக்கில் விற்ற நபர் கைது!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் அனைத்து அணிகளும் திறமையுடன் விளையாடி வருகின்றன.
இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், வரும் நவம்பர்ட் 5 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதையத்து, கொல்கத்தா போலீஸார் அங்கித் அகர்வால் என்ற நபரை கைது செய்துள்ளனர். அவர் ரூ.2500 மதிப்பிலான டிக்கெட்டை ரூ.11000 க்கு விற்றதாகவும் அவரிடமிருந்து 20 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.