1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (15:34 IST)

நெருங்கும் வாக்கு எண்ணிக்கை..! குமரியில் மோடி..! திருப்பதியில் அமித் ஷா...!

Modi Amithsha
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்படும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
 
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஜூன்-1) நடைபெறுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
பீகாரில் 8, சண்டிகரில் 1, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாபில் 13, உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடைசி கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நெருங்கும் நிலையில், கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது மனைவியுடன் திருப்பதிக்கு சென்று இன்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தலைமை பூசாரியின் வேத பாராயணங்களுக்கு மத்தியில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. அமித் ஷா வருகையை முன்னிட்டு திருப்பதியில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி பிரதமர் மோடி தியானம் செய்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.