வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:43 IST)

4 வயது மகளை மாடியிலிருந்து வீசி கொன்ற தாய்! – அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!

CCTV
கர்நாடகாவில் 4 வயது மகளை பெற்ற தாயே மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரில் உள்ள எஸ்.ஆர் நகரில் பெண் பல் மருத்துவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் சாஃப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகள் முன்னதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை வளர வளர குழந்தைக்கு செவி கேட்கும் திறன் இல்லாததோடு, பேச்சு திறனும் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் குழந்தையின் தாய் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த பெண் தான் வசிக்கும் குடியிருப்பு கட்டிடத்தின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து தனது 4 வயது மகளை கீழே வீசியுள்ளார். பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் குழந்தை இறந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தாயின் மனநலம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.