1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (17:07 IST)

மனைவியை 11 ஆண்டுகளாக அறைக்குள் பூட்டி வைத்திருந்த வக்கீல்!

abuse
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் வசித்து வரும் வக்கீல் ஒருவர் தன் மனைவியை 11 ஆண்டுகளாக அறைக்குள் பூட்டி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்.எ.ஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோதாவரி மதுசூதனன். இவர், அப்பகுதியில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சாய் சுப்ரியா.

சமீபத்தில், சுப்ரியாவின் தாய், மதுசூதனனிடம், சுப்ரியா எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  இதற்கு அவர் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து,  சுப்ரியாவின் தாய் போலீஸில் தொடர்பு கொண்டு இதுபற்றி புகாரளித்துள்ளனர்.

பின்னர்,  மதுசூதனன் வீட்டிற்கு  விரைந்து வந்தனர். அப்போது, அவர்களைத் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினார் மதுசூதனன்.

அதன்பின்னர், சுப்ரியாவின் பெற்றோர், நீதிமன்றத்தை அணுகி, வாரண்ட் பெற்று,  மதுசூதனன் வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வீட்டின் ஒரு அறையில் 11 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: நீதிமன்ற  உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.