புதிய கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்த சிங் தெரிவித்த நிலையில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இதனால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கும் அமரீந்தர் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் சமீபத்தில் அவர் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.