புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 23 அக்டோபர் 2021 (20:46 IST)

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின் சில  முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்றின்  முதல் அலை முடிந்து தற்போது 2 வது வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சில  முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். அதில்தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
அதில்.உணவகங்கள், பேக்கரிகளுக்கு இரவு 11 மணிவரை செயல்படலாம் என உத்தரவு இன்று முதல் நீக்கப்படுகிறது.

மதுபானக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது., 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் முதல் சுழற்சிமுறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.