செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (20:56 IST)

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

முதலமைச்சர் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  பரோட்டா மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.

இதனையடுத்து தேனாம்பேட்டையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தது பொய் என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வண்டலூர் அருகே பரோட்டா மாஸ்டராகப் பணிபுரியும் பழனிவேல் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.