புலம்பெயர் தொழிலார்களுக்கு வேலைவாய்ப்பு …ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் – நிர்மலா சீதாராமன்
கொரொனா பாதிப்பால் உலக நாடுகள் பெரும் பொருளாத பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி, சில நாட்களுக்கு மு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.
அதன்பின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஅமைச்சர் நிர்மலா சீதாரமான கூறியதாவது :
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டன. 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.