1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2021 (21:28 IST)

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு நாட்டின் மிக உயரிய விருது !

மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவித்து கௌரவித்துள்ளது மத்திய அரசு.

சமீபத்தில் வரும் 25 ஆம் ஆம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் பெயரை அறிவிப்பதாக தகவல்கள் வெளியானது.

 இந்நிலையில், தற்போது இந்தாண்டில் பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அதில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி , மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டிமன்ற பேச்சாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான சாலமன் பாப்பய்யா, வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், படாகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோருக்கு  பத்ம ஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுகு பத்ம பூஷண் விருதும், கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்பிரமணியனுக்கு பத்ம ஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது