’அண்ணாத்த’ ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்

annathe
’அண்ணாத்த’ ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்
siva| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (18:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது படக்குழுவினர் 4 பேருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்கு பின்னர் தான் தொடங்கும் என்று படக்குழுவினர்களின் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து சிறுத்தை சிவா சூர்யாவின் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்கு பின் தொடங்கினாலும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிகிறது ’அண்ணாத்த’ ரிலீஸ் குறித்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதில் மேலும் படிக்கவும் :