1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 ஜனவரி 2018 (17:12 IST)

மாணவிகளின் ஆடையை அவிழ்த்த ஆசிரியர்கள்: அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் இரண்டு மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
 
ஜோபாட் என்னும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் ஆயிரம் ரூபாய் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகளின் மீது சந்தேகம் ஏற்பட அந்த மாணவிகளை தனியாக அழைத்து சென்று ஆசிரியர்கள் அவர்களின் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்துள்ளனர்.
 
ஆனால் அந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அந்த இரண்டு மாணவிகளும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து பேசிய ஜோபாட் காவல் துணை ஆய்வாளர் ஆயிரம் ரூபாய் திருடியதாக இருண்டு மாணவிகள் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவர்களுடைய ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்தனர். ஆனால் அந்த பணத்தை வேறொரு மாணவி திருடியது பின்னர் தெரியவந்தது.
 
ஆனால் அந்த பள்ளியின் முதல்வர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். விரிவான விசாரணைக்கு பின்னர் முறையான புகாரை நாங்கள் தாக்கல் செய்வோம் என்றார்.