குளத்தில் விழுந்த அரசு பேருந்து; 8 பயணிகள் பலி
கர்நாடக மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த அரசு சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியத்தில் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட அரசு வோல்வோ சொகுசு பேருந்து தர்மசாலாவை நோக்கி சென்றது. இந்நிலையில் அதிகாலை மூன்றரை மணியளவில் பேருந்து ஹாசன் நகர் அருகே சென்றுக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைக்கு அருகே இருந்த குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.