வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (14:31 IST)

’மாணவர்களை ’ பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ! பெற்றோர் அதிர்ச்சி..

கேரளாவில் மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த மதரஸா பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான,இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இங்கு  ஆலுவா மாவட்டத்தில் வசித்துவந்த யூசுப் ( 63).  
 
இவர்  கோட்டயம் மாவட்டத்தில் தலயோபம்பு என்ற பகுதியில் உள்ள மசூதி சார்பில் நடத்தப்படும் மதரசா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் சுமார் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றார்கள்.
 
இந்நிலையில்ம் யூசுப், தன்னிடம் படிக்கும் குழந்தைகளிடம் சில்மிசம் செய்வது, தவறாக நடப்பதாக பெற்றோரிடம் மாணவர்கள் கூறியுள்ளனர்.இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸிடம் புகார் தெரிவித்தனர்.
 
பின்னர் , இந்தப் புகாரின் பேரின் போலீஸார் ஆசிரியர் யூசுப்பிடம் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 ஆண்டுகளில் தன்னிடம் படித்த 19 மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து போலீஸார் யூசுப்பை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.