செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (10:19 IST)

இளநீர் விற்பவர் என்னிடம் பணம் வாங்க மாட்டார்: டாடா குழும தலைவர் சந்திரசேகரன்..!

நான் தினமும் நடைபயிற்சி செய்யும் போது இளநீர் குடிப்பேன் என்றும் ஆனால் இளநீர் கடைக்காரர் என்னிடம் பணம் வாங்க மாட்டார் என்றும் அதற்கு பதிலாக கூகுள் பே , போன் பே மூலம் பணம் செலுத்துங்கள் என்று கூறுவார் என்று அந்த அளவுக்கு இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து உள்ளது என்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  
 
பி20 சம்மிட் இந்தியா 2023 கூட்டத்தில் டாடா குடும்ப தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது தினமும் காலை ஜாக்கின் செல்லும்போது இளநீர் இளநீர் குடிப்பது என்னுடைய வழக்கம். இளநீர் விற்பவர் என்னிடம் பணம் வாங்க விரும்புவதில்லை 
 
அனைத்து கடைக்காரர்களும் தற்போது குறைந்தது 3 க்யூஆர் கோட் வைத்துள்ளனர். அந்த அளவுக்கு டிஜிட்டல் பேமென்ட் தளம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று டாடா குடும்ப தலைவர் சந்திரசேகரன் பெருமையுடன் கூறினார்.
 
Edited by Siva