மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்ப்பெண்
தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்தப் போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். 19 வயதான அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார்.
இந்த போட்டியில் அரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரி இரண்டாம் இடத்தையும் ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ரேயா ராவ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.