திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (07:49 IST)

I.N.D.I.A கூட்டணி ஆட்சியை பிடிக்குமா? கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்..!

பாஜக கூட்டணிக்கு எதிராக I.N.D.I.A என்ற கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் அந்த கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பொது தேர்தல் நடைபெற நிலையில் இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அணைந்து ஒன்று இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. 
 
இந்த நிலையில் பிரபல தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் பலம் குறையலாம் என்றும் கூறியுள்ளது 
 
தற்போது 303 எம்பிக்கள் பாஜகவிற்கு நிலையில் அது 290 ஆக மாறும் என்றும் கூறியுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் அதிக தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
 
I.N.D.I.A கூட்டணிக்கு நாடு முழுவதும் 175 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 29, திமுகவுக்கு 19 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 
 
 உத்திரபிரதேசத்தில் I.N.D.I.A கூட்டணி வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு 9 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் I.N.D.I.A கூட்டணிக்கு 30 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva