1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (11:54 IST)

பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: வேதனை தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

supreme
மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக வெளியான வீடியோவை தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்ததாக தக வல் வெளியாகியுள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க மத்திய அரசுக்கும், மணிப்பூர் அரசுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு  பிறப்பித்துள்ளார்.
 
மேலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆவேசமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran