இப்படியா தேர்தல் நடத்துவது? சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு கடும் கண்டனம்
இப்படியா தேர்தல் நடத்துவது? சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை திருத்தியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இப்படியா அவர் தேர்தல் நடத்துகிறார்? இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். இது ஜனநாயக படுகொலை. அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் அதிகாரி வெளிப்படையாக தில்லுமுல்லு செய்தது தெரிகிறது என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சண்டிகர் மேயர் கூட்டத்தை கூட்டவும் தடை விதித்து உத்தரவிட்டார்.
முன்னதாக சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் திருத்தங்கள் செய்து 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக மேயர் வேட்பாளரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran