இந்தியப் பரப்பில் ஊடுருவல்! சீனாவுடன் தூதரக உறவை துண்டிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
இந்திய நிலப்பரப்பில் சுமார் 60 கிலோ மீட்டர் வரை சீனா ஊடுருவி இருப்பதாகவும் இதனை அடுத்து சீனாவுடனான தூதரகம் உறவை துண்டிக்க வேண்டும் என்றும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சீன எல்லையில் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பகுதிகள் சீன ராணுவத்தினரால் ஊடுருவப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீன வரைபடத்தில் சேர்த்து அதற்கு சீன மொழியில் பெயர் வைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தற்போது சீன ராணுவத்தினர் கட்டிய கட்டிடங்கள் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாரத மாதாவின் மரியாதைக்கு மோடி துரோகம் செய்துவிட்டதாகவும் சீனாவுடனான தூதரக அளவிலான உறவை துண்டிக்க கோரிக்கை வைக்கிறேன் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். சுப்ரமணியம் சாமியின் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தியின் 4000 கிலோமீட்டர் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
Edited by Mahendran