ஏன் இப்படி அவரை மட்டும் குறிவைத்து தாக்குகிறீர்கள்? தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய சு.சுவாமி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, அதற்கு தோனியின் மோசமான ஆட்டம்தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து அவர் டி20 போட்டியில் இருந்து விலக வேண்டும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்தனர்.
அப்போது தோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
புத்திசாலி மற்றும் துபாய் கேங்கிற்கு இணங்காதவருமான தோனியை ஏன் இப்படி தொடர்ந்து குறிவைத்து தாக்குகிறீர்கள்? கிரிக்கெட் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மனிதனுக்கு துணையாக தேசம் நிற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.