செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (11:57 IST)

சசிகலாவை விட பத்து மடங்கு ஊழல்வாதி கருணாநிதி: சுப்பிரமணியன் சுவாமி கடும் தாக்கு!

சசிகலாவை விட பத்து மடங்கு ஊழல்வாதி கருணாநிதி: சுப்பிரமணியன் சுவாமி கடும் தாக்கு!

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தை குறிவைத்து மெகா ரெய்டை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவை விட மிகப்பெரிய ஊழல்வாதி கருணாநிதி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பாஜக சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தாலும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே சசிகலா ஆதரவு நிலைப்பாடிலேயே உள்ளார். பல சந்தர்ப்பங்களில் அவர் அதை வெளிக்காட்டியுள்ளார். இரட்டை இலை தொடர்பாக, கட்சியின் அடுத்த தலைமை குறித்த கேள்வி எழும்போது என பல நேரங்களில் சசிகலாவுக்கு ஆதரவாகவே சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து வந்திருக்கிறார்.
 
இந்நிலையில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியதையும் சில நாட்களுக்கு முன்னர் , ஒரு சார்பாக சோதனை நடத்தக்கூடாது என விமர்சித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி இந்த ரெய்டு குறித்து பேசினார்.
 
சசிகலாவை விட பத்து மடங்கு ஊழல் செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. சசிகலா மீது ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்போது ஏன் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சுவாமி இந்த ரெய்டு நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என கூறினார்.