புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (17:15 IST)

ஆளுநரின் செயலால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்: தாராளமாக அளந்துவிடும் தமிழிசை!

ஆளுநரின் செயலால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்: தாராளமாக அளந்துவிடும் தமிழிசை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் தான் மேலும் அனைத்து மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாக ஆளுநர் தெரிவித்து உள்ளார்.


 
 
மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.  ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார் என பல அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் எதிர்க்க வேண்டிய ஆளும் அதிமுக வாயை மூடி மௌனம் காக்கிறது. ஒரு சில அமைச்சர்கள் இதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
 
ஆளுநரின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் தூண்டுதலால் நடக்கிறது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் என பொதுமக்களே பேசும் அளவுக்கு உள்ளது நிலைமை. ஆனால் ஆளுநரின் செயலை பார்த்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என அளந்து விடுகிறார் பாஜக மாநில தலைவர் தமிழிசை.
 
இதுகுறித்து பேசிய தமிழிசை, தமிழகத்தில் மக்கள் நலன் புறம் தள்ளப்பட்டு சுயநல அரசியல் மேல் தள்ளப்படுவதால்தான் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு கூட எதிர்ப்புகள் வருகிறது. ஸ்டாலின் நிறுத்த சொல்லும் அளவிற்கு, இது ஏதோ மக்கள் விரோத போக்கும் கிடையாது. இதை நிறுத்தச் சொல்லி கேட்கும் அளவிற்கு ஆளுநரின் அதிகாரமும் இல்லை.
 
ஆளுநர் இன்னும் பல மாவட்டங்களுக்கு செல்கிறேன் என்று சொல்வது ஆரோக்கியமான நகர்வு. இது ஊக்கப்படுத்த வேண்டியது. ஆளும் கட்சிக்கு இது பக்க பலமாகதான் இருக்கும். ஆனால் ஸ்டாலினுக்கு என்ன கவலை என்றால் இவர்கள் பலம் கூடி விடக்கூடாது என்ற கவலை. பல தலைவர்களுக்கும் அந்த கவலை இருக்கிறது.
 
தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும். நமது திட்டங்களை மேற்பார்வையிடுவதற்கு இன்னொரு மூத்த நிர்வாகி அக்கறையோடு செயல்படுகிறார் என்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.