தற்கொலை செய்துகொண்டது எப்படி: கடிதம் எழுதி வைத்த மாணவர்!
தற்கொலை செய்துகொண்டது எப்படி: கடிதம் எழுதி வைத்த மாணவர்!
ஹைதராபாத்தில் மாணவன் ஒருவன் மன உளைச்சல் காரணமாக விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். தான் எப்படி தற்கொலை செய்துகொண்டேன் என்பதையும் அந்த மாணவன் கடிதமாக எழுதி வைத்துள்ளான்.
தெலுங்கானாவின் நல்கோண்டா மாவட்டத்தை சேர்ந்த நவின் குமார் என்ற 24 வயதான மாணவன் ஒருவன் ஹைதராபாத்தில் போட்டி தேர்வுக்கு தயாராக விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளான்.
மன உளைச்சலுடன் இருந்த நவின் குமார் இணையதளத்தில் தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்தான பல வீடியோக்களை பார்த்து வந்துள்ளான். அதனை பார்த்து அவனும் தற்கொலை செய்துள்ளான்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மாணவன் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள கயிற்றை எப்படி ஃபேனில் கட்டுவது, முடிச்சை இறுக்கமாகப் போடுவது எப்படி என்று இணையத்தில் இருந்த வீடியோக்களைப் பார்த்து அறிந்துகொண்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுதியுள்ளார். காவல்துறை தொடர்ந்து இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.