வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (17:30 IST)

மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு..! துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு..!!

Police
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில், நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
 
முதல் கட்டத் தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர், சந்திராபூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சித்தூர், ராம்டெக் மக்களவைத் தொகுதியில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், நக்சல் பாதித்த பகுதியான கட்சிரோலி மலையோர பகுதிகளில் கன்னிவெடி வைக்கப்பட்டுள்ளதா என்று மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். ஆள் இல்லாத ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தினர். நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, சமீபத்தில் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட என்கவுண்ட்டரில் 29 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.