வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (10:26 IST)

அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரட்டப்பட்ட வருமானம்: அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வறிக்கை..!

அரசியல் கட்சிகள் பெற்ற வருமானத்தில் 66% அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பெற்றது என இது குறித்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் உள்ள ஏழு தேசிய கட்சிகள் 66% வருமானம் அடையாளம் தெரியாதவர்களிடமிருந்து பெற்றுள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை 2021 - 22 ஆம் ஆண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து 2272 கோடி வருமானம் பெற்றுள்ளது என்றும் இது மொத்த வருமானத்தில் 66% என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்த ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran