1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (15:49 IST)

கருணாஸ் தயாரிப்பில் அரசியல் நய்யாண்டி படமாக உருவாகி வரும் பிரசிடெண்ட்!

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை , குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என பல வேடங்களில் நடித்து வருபவர் கருணாஸ். இடையில் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். இவருக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர். கென் அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள நிலையில் சமீபத்தில் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது.

சினிமாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு, அரசியலில் செயல்பட்ட அவர் மீண்டும் சினிமாவுக்கே திரும்பி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது தன்னுடைய இண்டியன் சினி வே தயாரிப்பு நிறுவனம் மூலமாக பிரசிடண்ட் என்ற அரசியல் நய்யாண்டி படத்தில் நடித்து தயாரித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சத்தியமூர்த்தி இயக்கியுள்ளார். விமல் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.கருணாஸ் ஏற்கனவே சல்லியர்கள் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை மேதகு படத்தின் இயக்குனர் கிட்டு இயக்கியுள்ளார்.