நான்கு மாடி நட்சத்திர விடுதியில் திடீர் தீ விபத்து..
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் நான்கு அடுக்கு மாடி கொண்ட நட்சத்திட விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், விஜய் நகர் பகுதியில், கோல்டன் கேட் என்ற நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த நட்சத்திர விடுதி நான்கு அடுக்கு மாடி கொண்டது.
இந்நிலையில், அந்த நட்சத்திர விடுதியில் திடீரென தீப்பற்றியது. இத்தகவலை அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடுதியில் தங்கியிருந்த பலர் தீ பரவ ஆரம்பித்தவுடனே வெளியேறிவிட்டதாகவும், எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் தீ எப்படி பரவியது என்பது குறித்தான விவரம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.