இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் பிரதமர் ஆவார்.. அமைச்சர் அமித்ஷா
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் தான் பிரதமர் என மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல் அடுத்த அடுத்த நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒரு ஆண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார், அதன் பின் மம்தா பானர்ஜி, சரத்பவார் பிரதமராக இருப்பார்கள். ஒருவேளை ஒரு ஆண்டு மிச்சம் மீதி இருந்தால் அதில் தான் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று கேலியும் கிண்டலுமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அந்த கூட்டணியின் சார்பில் அறிவிக்காத நிலையில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்களில் முதல் பெயராக ஸ்டாலின் பெயரை அமித்ஷா அறிவித்துள்ளார். அதனை அடுத்து அவர் மம்தா பானர்ஜி மற்றும் சரத்பவார் பெயர்களை அறிவித்துள்ளார் கடைசியாக தான் ராகுல் காந்தி பெயரை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran