ப சிதம்பரம் கனவு ஒருபோதும் பலிக்காது: உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி..!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்த நிலையில் அவருடைய கனவு ஒரு நாளும் பலிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பிரச்சாரம் செய்த ப சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறிய நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்
1960 ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்றும் மோடி பிரதமர் ஆனார் பின்னர் தான் அனைத்து மதங்களும் சமமாக பார்க்கப்பட்ட வேண்டும் தெரிவித்தார்
மேலும் ப சிதம்பரம் சிஏஏ சட்டத்தின் குறைபாடுகள் என்னென்ன என்பதை கூறவில்லை, மாறாக சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அவர் இவ்வாறு கூறிய நிலையில் அவருடைய கனவு ஒரு நாளும் பலிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்
சிஏஏ சட்ட சட்டத்தால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை என்றும் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று கூறியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ப சிதம்பரம் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
Edited by Mahdendran