வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (17:59 IST)

இந்தியாவின் முதல் பௌத்த மாநிலம் – இலங்கை பிரதமர் வாழ்த்து

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படுவதை தொடர்ந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக இருப்பதை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்துக்கான சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து லடாக் காஷ்மீரிலிருந்து பிரிந்து தனி யூனியன் பிரதேசமாக மாற இருக்கிறது. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம். அதேபோல லடாக் பகுதியில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

யூனியன் பிரதேசமாக பிரிப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக லடாக் மாற இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர் “லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாறியிருக்கிறது. 70 சதவீதம் புத்த மத மக்களை கொண்ட லடாக் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக ஆகிறது. நான் லடாக்கிற்கு பயணித்திருக்கிறேன். அனைவரும் கண்டிப்பாக பயணிக்க வேண்டிய இடம் அது” என்று தெரிவித்துள்ளார்.