செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (14:36 IST)

பாஜகவில் இணைந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா! 3 வாரங்கள் ஆலோசித்ததாக தகவல்..!

33 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்த ஸ்ரீலேகா ஐபிஎஸ் கேரள பாஜகவில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை பெற்றவர் ஸ்ரீலேகா. இவரது YouTube சேனல் பிரபலமாக உள்ள நிலையில், சமீபத்தில் இவர் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், தற்போது கேரள மாநில பாஜகவில் அவர் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீலேகா, "நான் மூன்று வாரங்களாக ஆலோசனை செய்து பாஜகவில் இணைந்தேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்துதான் அந்தக் கட்சியில் இணைந்துள்ளேன்.

33 ஆண்டுகளாக நான் போலீஸ் அதிகாரியாக நடுநிலையாக பணிபுரிந்தேன். உறுதிமொழி எடுத்துக் கொண்டது போலவே நான் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தேன். ஓய்வுக்கு பிறகு சில விஷயங்களை வெளியில் நின்று இன்னொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.

அதன் பின் என் அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. மக்களுக்கு ஆதரவாக இருப்பதே பெரிய சேவை," என்று தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran