திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (21:09 IST)

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக அமல்ராஜ் நியமனம்.!!

assembly
தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில், தாம்பரம் காவல் ஆணையராக அபின் தினேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அமலாக்க பிரிவு ஏடிஜிபியாக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படைஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் அவர்களும், குற்ற ஆவணபிரிவு ஏடிஜிபியாக ஜெயராம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
சென்னை காவல் துறை தலைமையக ஏடிஜிபியாக வினித் தேவ் வாங்கடே நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி (குற்றக்கிளை) ஏடிஜிபியாக அன்பு அவர்களும், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
 
சென்னை கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபியாக சஞ்சய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சைபர் கிரைம் விங் ஏடிஜிபியாக சந்தீப் மிட்டல் அவர்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு டிஜிபியாக ராஜிவ் குமார் அவர்களும், தொழில் நுட்ப சேவை ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மதுரை தெற்கு மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களும், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக கண்ணன் அவர்களும்,  வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நரேந்திரன் நாயர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
சேலம் மாவட்ட ஆணையராக பவன்குமார் அபினபு அவர்களும், சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.யாக விஜயகுமாரி அவர்களும், திருப்பூர் மாவட்ட ஆணையராக லட்சுமி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.