விரைவில் தங்கம் விலை ரூ. 50 ஆயிரத்தை தாண்டும்?
தங்கம் விரைவில் ரூ, 50000 தாண்ட வாய்ப்பு!
2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதில் நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம்.
இன்றைய விலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ. 42880.00 விற்கப்படுகிறது. இது செய்கூலி சேதாரத்தோடு சேர்த்தால் 43,000 ஆயிரத்தை தாண்டுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வெள்ளி விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. அப்படி பார்த்தால் விரைவில் ரூ. 50000 தாண்டிவிடும். இதனால் சராசரி மக்கள் அதிர்ச்சியடுத்துள்ளனர்.