1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (12:28 IST)

விவசாயிகளுக்கு ஜாக்பாட்: 2023 பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

2023-2024ம்  நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து இந்கு காணலாம். 
 
 
47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
 
கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு
 
மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி.
 
உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
 
கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு
 
தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு
 
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்
 
விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்.
 
வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு
 
குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்
 
157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
 
வருட ரூ. 7 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கட்ட தேவை இல்லை!
 
இதில் பெரும்பாலும் வேளாண்மை, விவசாயம் சார்ந்த துறைக்கு கோடிக்கணக்கில் சலுகைகள் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.