புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (14:13 IST)

உத்தரகாண்ட் வெள்ளத்தால் ஆதரவற்ற குழந்தைகள்! – தத்தெடுத்துக் கொண்ட சோனு சூட்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடும்பத்தை இழந்த குழந்தைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் நந்தாதேவி மலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பலர் உயிரிழந்த சம்பவம் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் மாயமான உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான ஆலம் சிங் என்பவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இதனால் அவரது 4 பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தள்ளப்பட்டனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில் அந்த குழந்தைகளை தேடி பிடித்து தத்தெடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் சோனுசூட். அந்த நான்கு குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார்.