திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 2 ஜூன் 2016 (11:58 IST)

ஆர்.எஸ்.எஸ். தலையீடு குறித்து ஸ்மிருதி இராணி கருத்து

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் ஆர்.எஸ்.எஸ். தலையீடு குறித்து கேட்கப்பட்டது.


 
 
கேள்வி: உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்படுவீர்களா?
 
பதில்: நான் மத்திய அமைச்சராக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
 
கேள்வி: தொடர்ந்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பேசி வருகிறீர்களே?
 
பதில்: பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ராகுல் காந்தி பற்றி கேட்கின்றார்கள். நான் பதிலளிக்கின்றேன் அவ்வளவுதான்.
 
கேள்வி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசின் கல்விக் கொள்கையில் தலையிடுகிறதா?
 
பதில்: இல்லை.