1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (15:09 IST)

பாஜக வேட்பாளருக்கு சிவசேனாவும் ஆதரவு: திரெளபதி முர்மு வெற்றி உறுதியா?

sivasena
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் தற்போது பாஜக உடன் நேருக்கு நேர் மோதிய சிவசேனாவும் ஆதரித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனை அக்காட்சியின் எம்பி ஒருவர் உறுதி செய்துள்ளார். உத்தவ்தேவ் தாக்கரே  தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா எம்பிக்கள் வலியுறுத்தியதாகவும், அதனை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டதாகவும் இதனை அடுத்து திரெளபதி முர்முவுக்கு ஆதரவு  என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதால் பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.