செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (16:02 IST)

கடலூர் திமுக எம்.எல்.ஏ பாஜகவில் இணைகிறாரா? அவரே தந்த விளக்கம்!

cuddalore dmk mla
கடலூர் திமுக எம்.எல்.ஏ பாஜகவில் இணைகிறாரா? அவரே தந்த விளக்கம்!
கடலூர் திமுக எம்எல்ஏ பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
 
கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் கடந்த சில நாட்களாக திமுக நிகழ்ச்சிகளில் பங்கு பெறாமல் இருந்தார். இதனை அடுத்து அவர் பாஜகவுக்கு செல்லப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின
 
இந்த நிலையில் இது குறித்து திமுக எம்எல்ஏ ஐயப்பன் விளக்கம் அளித்தபோது சிலர் என் மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் 
 
நான் சாகும் வரை திமுகவில் தான் இருப்பேன். திமுகவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். திமுக என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் திமுகவில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்
 
தனை அடுத்து திமுக எம்எல்ஏ பாஜகவில் இணைய இருப்பதாகக் கூறப்பட்டது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது