புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2019 (16:00 IST)

கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்...

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் பெரும் புகழ்பெற்றவை. இங்குள்ள  வங்கிகளில் இந்திய நாட்டுள்ள பல்வேறு செல்வந்தர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறி பிரதமர் மோடி மற்றும்  பாஜகவினர் கடந்த 2014 ஆண்டு மக்களவைத்தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர்களான 50 பேர்களின் விவரங்களை அளிக்க அந்நாட்டு அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது..
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி, இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளிடையே நிதிபரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பரஸ்பரமாக மேற்கொள்வதற்க்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு அந்நாடிலிருந்து சில தகவல்களையும் இந்தியா பெற்றது.  இந்நிலையில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கிவைத்திருப்பதாக கூறப்படும் 50 இந்தியர்களை குறித்த தகவல்களை மத்திய அரசிடம் வழங்குவதற்கு சுவிஸ் அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.இதனால் அங்கு பணத்தை பதுக்கிவைத்திருப்போர் அதிர்ச்சியில்  உள்ளதகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.