70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!
70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் பெற்று வெளியே வந்து மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது குஜராத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 70 வயது மூதாட்டியை கடந்த 15ஆம் தேதி, 35 வயது ஷைலேஷ் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சொன்னால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மூதாட்டியை மிரட்டி உள்ள நிலையில், அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார்.
உடனே வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஷைலேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் அதே மூதாட்டியை சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நபர், ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவரம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva