செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (18:07 IST)

இன்று ஒரே நாளில் 586 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர் பெரும் லாபம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது பங்குச் சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை இன்றைய வர்த்தக முடிவில் 586.66 புள்ளிகள் இறங்கி 52,553.40 என்ற புள்ளியில் வர்த்தக முடிந்தது. அதேபோல் நீப்டி இன்று ஒரே நாளில் 171 புள்ளிகள் இறங்கி 15752 என்ற புள்ளியில் வர்த்தக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெரும்பாலான பங்குகள் என்று குறைந்துள்ளதை அடுத்து அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது