1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (12:57 IST)

ரகசிய அறை அமைத்து லாரியில் கட்டு கட்டாக பணம்.! ரூ.8 கோடி பறிமுதல்..! மிரண்டு போன போலீசார்..!

Money Seized
ஆந்திராவில் பைப் ஏற்றி வந்த லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி ரூ.8 கோடி பணத்தை பதுக்கி எடுத்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குபதிவு நடைபெற்ற முடிவடைந்த நிலையில், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து மக்களவை தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படையினரும், போலீசாரும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிக்காபாடு சோதனைச்சாவடியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைப்களை ஏற்றிவந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி அதில் ரூ.8 கோடி பணம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியுடன் பணத்தை பறிமுதல் செய்த போலீசார்,  பணத்தை லாரியில் எடுத்து வந்த 2 பேரை கைது செய்தனர்.


இந்த பணம் ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.