வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 8 மே 2024 (14:00 IST)

ஒரு எபிசோடுக்கு ரூ.17 கோடி.. ஓடிடி தொடருக்கு பிரபல நடிகர் வாங்கும் சம்பளம்..!

ஒரு எபிசோடுக்கு 17 கோடி என  7 எபிசோடுக்கு 126 கோடி ரூபாய் பிரபல நடிகர் சம்பளம் வாங்கியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது திரைப்படங்கள் போலவே ஓடிடி வெப்தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பிரபல நட்சத்திரங்கள் கூட ஓடிடி வெப்தொடரில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஓடிடி வெப்தொடரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.

இவர் சமீபத்தில் ருத்ரா என்ற வெப் தொடரில் நடித்த நிலையில் இதில் 7 எபிசோடுகள் உள்ளன. இந்த தொடரில் அவர் நடித்ததற்கு ஒரு எபிசோடுக்கு 18 கோடி வீதம் மொத்தம் ஏழு எபிசோடுக்கு 126 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அஜய் தேவ்கனை அடுத்து மனோஜ் பாஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ. 10 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran