வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (21:13 IST)

சீனர்களை பார்த்து தெறிந்து ஓடிய ஆட்டோ ஓட்டுநர்கள்...

கொரோனா வைரஸ்  தாக்குதல் உலக நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை தனியாக வைக்கப்பட்டு கவனிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில்,  ஆந்திரமாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து 15 பயணிகள் வந்து இறங்கினர். அப்போது அங்கு நின்ற ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.
 
ஆனால் அவர்களைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் , கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அச்சத்தில்  அங்கிருந்து ஓடிச் சென்றனர். பின்னர், அதிகாரிகள் அவர்களுக்கு உரிய சோதனை நடத்தி கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்த பின்னர் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.