வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (08:30 IST)

பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த சத்ருஹன்சின்ஹா: திடீர் பல்டி ஏன்?

கடந்த சில வருடங்களாக பாஜகவின் எம்பியாக இருந்த நடிகர் நடிகர் சத்ருகன் சின்கா, பிரதமர் மோடிக்கு எதிரான ஒரு சில கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைக்கு உள்ளானார். இதனை அடுத்து அவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பாட்னாவில் சாகிப் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சத்ருகன் சின்கா, மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மீண்டும் நடிகர் சத்ருகன் சின்கா பாஜகவிற்கு செல்வார் என்று ஒரு வதந்தி பரவியது. 

 
இந்த நிலையில் பிரதமர் மோடி சமீபத்தில் சுதந்திர தின உரை அளித்தபோது அந்த உரைக்கு நடிகர் சத்ருகன் சின்கா பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமரின் சுதந்திரதின உரை மிகவும் தைரியமான பேச்சு என்றும், சிந்தனையை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந்தது என்றும், சிறப்பான ஆய்வுகள் உடன் கூடிய உரை என்றும் சத்ருகன் சின்கா பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடியை பாராட்டி தனது டுவிட்டரிலும் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
 
 
பிரதமர் மோடியின் உரையை சத்ருகன் சின்கா பாராட்டி உள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரதமரின் சுதந்திரதின உரையை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பாராட்டியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் பிரமுகர் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது