1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (17:58 IST)

கட்சி பறிபோனதால் பரிதாபம்.. தாய்க்கட்சியில் இணைகிறாரா சரத்பவார்..!

தேசியவாத காங்கிரஸ் கட்சியை இழந்துள்ள சரத் பவர் தனது தாய் கட்சியான காங்கிரஸில் இணைய இருப்பது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியிலிருந்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி மகாராஷ்டிராவின் வலிமையான அரசியல்வாதியாக திகழ்ந்தார்.
 
 கடந்த 1999 ஆம் ஆண்டு அவர் கட்சியை ஆரம்பித்த பின்னர் அவருடன் அஜித் பவார் உள்பட பலரும் இணைந்தனர் என்பதும் இதனால் அவர் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அஜித் பவார் அவரை விட்டு பிரிந்து சென்றதோடு, சொந்த கட்சியை இழந்துள்ளதார். தற்போது 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் இனிமேல் சுறுசுறுப்புடன் புதிய கட்சியை நடத்த முடியாது என்பதால் அவர் தனது தாய் கட்சியில் இணைந்து விட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
காங்கிரஸ் கட்சியும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்த அழைப்பை ஏற்று அவர் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது மகள் மறுத்தாலும் சரத்பவார்  விரைவில் காங்கிரஸ் கட்சிஉஒ; சேருவார் என்று தான் மகாராஷ்டிரா அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva